தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விமானப்படை பயிற்சி முடித்த 420 வீரர்கள் - பணிக்கு செல்லும் வழியனுப்பு விழா - Air Force Training 420 players

சென்னை: ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 420 வீரர்கள் பணிக்கு செல்லும் வழியனுப்பு விழா நடைபெற்றது.

Air Force Training 420 players - Route Function to Work
Air Force Training 420 players - Route Function to Work

By

Published : Jun 21, 2020, 7:45 PM IST

Updated : Jun 22, 2020, 3:03 AM IST

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள விமானப்படை மையத்தில் ஆட்டோ மொபைல் பிட்டர் , ஆட்டோ மொபைல் டெக்னிசியன், விமான போக்குவரத்து மெக்கானிக் , விமான காவல் படை, பாதுகாவலர் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் 420 வீரர்கள் வெற்றிகரமாக பயிற்சி முடித்து பணிக்கு செல்கின்றனர். அவர்களை கௌரவித்து பரிசுகள் வழங்கி வழியனுப்பும் விழாவானது ஆவடி விமானப்படை மைதானத்தில் வீரர்களின் சாகச நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு ஆவடி விமானப்படை மையத்தின் கமாண்டர் தினேஷ் சிங் டாகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கி வீரர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கியதோடு சான்றுகளையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வீரர்களின் துப்பாக்கி சுடுதல் நிகழ்ச்சி, விழாவிற்கு வந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக வீரர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும் தகுந்த இடைவெளியில் நின்று பாதுகாப்பாக அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

Last Updated : Jun 22, 2020, 3:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details