சென்னை: அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி, தசரா,ஆயுத பூஜை, மிலாடி நபி என தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக 4,500 ரூபாய் கட்டணம் தற்போது 6 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் செல்லும் விமான கட்டணம் 5 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரம் ரூபாய் வரையும் கொல்கத்தாவிற்கு 15,000 ரூபாயிலிருந்து 22,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.