அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சார்பில் சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், ”அமெரிக்காவின் கொள்கைகள் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எதிரானதாகும். அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்திய நலன்கள் காவு கொடுக்கப்பட்டுள்ளன. ட்ரம்பின் வருகையால் நம் பொருளாதாரத்திற்கும், சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படவுள்ளது. இந்திய வேளாண் பொருட்களை இங்கே விற்பனை செய்து வருகிறோம். ஆனால் அமெரிக்க சந்தையை இங்கே இறக்கி நம் வாழ்வாதாரத்தை நசுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.
உயிர் காக்கும் மருந்துகள் மேலை நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படும் நிலையில் இங்கே ஜெனடிக் மருந்துகள் என குறைவாகக் கிடைக்கிறது. இவற்றையும் காப்புரிமையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே அமெரிக்க அதிபர் வருகையின் நோக்கமாக உள்ளது. அமேசான் உள்ளிட்ட பல இ காமர்ஸ் நிறுவனங்களை இங்கே ஆழமான அடித்தளமிடும் முயற்சியே இந்த சந்திப்பு.