சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் காணொலிகளையும் ஊடகங்களுக்கு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தனது பதிலுரையில், “இது பரிசீலனையில் இருக்கிறது” என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் அமைச்சர்கள் அளிக்கக்கூடிய பதில்கள் மட்டுமே ஊடகத்திற்கு வழங்கப்படுகின்றன.