சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை உரையை தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு எதிர்கட்சிக்கு பேச வாய்ப்பு தரவேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எதிர்க்கட்சி மீது பொய் வழக்கு போடக்கூடாது... அதிமுக வெளிநடப்பு... - Tamil Nadu Budget Highlights
தமிழ்நாடு பட்ஜெட் உரையின்போது எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடக்கூடாது என்று கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
aiadmk-walks-out-in-tamilnadu-budget-session
அப்போது, சபாநாயகர் அப்பாவு குறுக்கீட்டு சட்டப்பேரவையின் மரபை அதிமுகவினர் காக்க வேண்டும் என்று கூறி வாய்ப்பு வழங்க மறுத்தார். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடக்கூடாது என்று கோஷமிட்டனர். இதையடுத்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் நிதியமைச்சர் மீண்டும் உரையை வாசிக்க தொடங்கினார்.
இதையும் படிங்க:Live Updates: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை உடனுக்குடன்