இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக வழக்கறிஞர்கள் நீலகண்டன் மற்றும் பச்சையப்பன் ஆகியோர், “நாளை நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக முறைப்படி எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் 100% வாக்குப்பதிவு நடக்க ஏதுவாக தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
விதிமீறும் அதிமுக! - சத்யபிரதா சாகுவிடம் திமுக புகார்! - தேர்தல் ஆணையம்
சென்னை: தேர்தல் ஆணைய விதியை மீறி சமூக வலைதளங்களில் தற்போதும் அதிமுக விளம்பரம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க திமுக சார்பில் சத்யபிரதா சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியலையும், அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினரை நியமிக்கவும் கோரியுள்ளோம். வாக்குப்பதிவை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் சிசிடிவி மூலம் நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுள்ளோம். அதோடு, தேர்தல் விதிமுறைகள் வந்த பிறகும் சமூக வலைதளங்களில் அதிமுக விளம்பரம் செய்கிறது. எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளோம். பல்வேறு இடங்களிலும் பணப்பட்டுவாடா செய்து வரும் அதிமுக குறித்தும் புகாரளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலை, காட்பாடி உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தல் ரத்து?