சென்னை: அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து ஓபிஎஸ் தரப்பினரை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈபிஎஸ் ஈடுபட்டுள்ளார்.
அந்த வரிசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி-யை கட்சியில் இருந்து நீக்கினார். இப்பொழுது ப.ரவீந்திரநாத் எம்.பிக்கு அதிமுக அந்தஸ்தை நீக்கி, அவர் தன்னிச்சையான எம்.பியாக அறிவிக்க வேண்டும் என ஈபிஎஸ் மக்களவை சபாநாயருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பாக, தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு சென்ற ஒரே எம்.பி ப.ரவீந்திரநாத் ஆவார். ப.ரவீந்திரநாத் தேனி மாவட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருந்தார். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஈபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.