சென்னை: சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஆடுதொட்டி பகுதியின் அருகே அதிமுக பகுதி கழகம் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய, பெண்களைத் தொடர்ந்து இழிவாக பேசிவரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் ! - சென்னை அண்மைச் செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமியை அவதூறாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ராயபுரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
அப்போது கண்டன கோஷங்களை எழுப்பி உதயநிதி ஸ்டாலின் கண்டித்து புகைப்படங்களை வைத்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து உதயநிதியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:சென்னையில் கரோனா பரவல் விகிதம் 1.7ஆக குறைவு : மாநகராட்சி தகவல்