தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவு உடன் சந்திப்பு - தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.முனுசாமி, அன்பழகன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவை சந்தித்துள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவு உடன் சந்திப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவு உடன் சந்திப்பு

By

Published : Oct 18, 2022, 9:42 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.முனுசாமி, அன்பழகன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவை சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக முறையிட்டு வருவதாகவும், அதன்பின்னரே சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் வைத்தியலிங்கம், ஐயப்பன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆகவே எங்களது பரிந்துரைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை ஏற்க வேண்டும் என்றும் முறையிட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details