தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்டவர்களில் 66 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் பாமகவில் 5 உறுப்பினர்களும், பாஜகவில் 4 உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று(மே.7) மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்கின்றனர்.
இந்த கூட்டத்தில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு தலைவர் (எதிர்க்கட்சி தலைவர்) தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. மேலும், கட்சியின் கொறடா தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் எதிக்கட்சித் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது. இதனிடைேயே வேறு சில மூத்த அமைச்சரில் யாராவது ஒருவரை நியமிக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
தற்பொழுது மாநிலளங்களவை உறுப்பினர்களாக உள்ள வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர். இவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தொடர்வார்களா? அல்லது மாநிலங்களவை உறுப்பினர்களாக தொடர்வார்களா என்பது குறித்தும் முடிவு செய்ய உள்ளனர்.
அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட ஒ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு தேனீர் விருந்து அளித்தார்.
இதையும் படிங்க: முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!