தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் கட்சியிலிருந்து நீக்கம்! - அதிமுக கொள்கை

சென்னை: அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததால் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் கட்சியிலிருந்து நீக்கம்செய்யப்பட்டார்.

அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் கட்சியிலிருந்து நீக்கம்!
அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் கட்சியிலிருந்து நீக்கம்!

By

Published : Mar 18, 2021, 5:16 PM IST

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், “அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், நடந்துகொண்டதாலும், அதிமுக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளரை எதிர்த்து, சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் கட்சியிலிருந்து நீக்கம்!

மேலும் அதிமுக கட்சி வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ள காரணத்தினாலும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சி. சந்திரசேகரன் இன்று (மார்ச் 18) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...ELECTION BREAKING: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு

ABOUT THE AUTHOR

...view details