நவம்பர் 20ஆம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம்
22:29 November 17
நவம்பர் 20ஆம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்
சென்னை: அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 20ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.