தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம் - AIADMK leader Madhusudan

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுசூதனன் கவலைக்கிடம்
மதுசூதனன் கவலைக்கிடம்

By

Published : Jul 19, 2021, 10:50 PM IST

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.

மேலும், அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரை முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பார்வையிட்டு நலம் விசாரித்தார். மதுசூதனன் 1990-96 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறித் துறை அமைச்சராக இருந்தவர்.

ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய காலகட்டத்தில் அவருக்கு ஆதரவளித்த முக்கியத் தலைவர்களில் மதுசூதனனும் ஒருவர்.

மதுசூதனன் உடல்நலம் விசாரித்த ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details