தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிவர் புயல்: நிவாரண உதவிகள் வழங்க தொண்டர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தல்

சென்னை: வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை உடனடியாக வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று, கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

AIADMK
AIADMK

By

Published : Nov 25, 2020, 6:32 PM IST

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உடனடியாக களப்பணியாற்றிட அன்புக் கட்டளையிடுகிறோம்.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவுப் பொருள்களை உடனடியாக வழங்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். எத்தனை வேளை உணவு என்றாலும் அவற்றை மக்கள் அனைவரும் தேவையான அளவுக்குப் பெறுவதை உறுதி செய்யுங்கள்.
வெள்ளத்தில் ஆடைகளை இழந்தோர், அடிப்படைத் தேவைகளை இழந்தோர் அனைவருக்கும் அதிமுகவின் அன்புக் கரங்கள் விரைந்து உதவட்டம்.

பெய்து வரும் பெருமழையால் தாழ்வான பகுதிகளிலும், கரையோரப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியும், சூழ்ந்தும் இருக்கும். அந்தத் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மின்மோட்டார்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஏற்பாடுகளைச் செய்யுங்கள். புயல் கடந்து, மழை ஓய்ந்து நிலைமை சரியாகத் தொடங்கும் வரையில் செய்யப்பட வேண்டிய மறுவாழ்வுப் பணிகளிலும் அக்கறை செலுத்துங்கள். தமிழ்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அவர்களுக்கு தேவையானவற்றை கடமை உணர்வோடு திறம்படச் செய்யுங்கள்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details