தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விவசாய சட்டங்கள் வாபஸ், பிரதமருக்கு அதிமுக நன்றி! - ஈபிஎஸ் ட்வீட்

விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு போடப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய பெருமக்களுக்கு புரிய வைக்க முடியாததால், அதனை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பை அதிமுக வரவேற்றுள்ளது.

eps tweet, ops tweet, farm laws, aiadmk leaders tweet, centre repealed farm laws, ஓபிஎஸ் ட்வீட், ஈபிஎஸ் ட்வீட், அதிமுக, KisanMajdoorEktaZindabaad, Masterstroke, pm narendra modi, வேளாண் சட்டங்கள் வாபஸ், பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் போராட்டம், farmers protest
ஓபிஎஸ் ஈபிஎஸ் ட்வீட்

By

Published : Nov 19, 2021, 6:07 PM IST

Updated : Nov 19, 2021, 6:16 PM IST

சென்னை: வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் மற்றும் 2020 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் சேவைகள் சட்டம் என மூன்று சட்டங்கள் சென்ற ஆண்டு நாடாளுன்றத்தில் இயற்றப்பட்டன.

இருப்பினும், இந்த மூன்று சட்டங்கள் மூலம், விளைபொருள்களில் பெரும் வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் என்றும், விவசாயிகளின் நிலங்கள் பறிபோய்விடும் என்ற அச்சம் விவசாயிகளிடத்தில் இருக்கிறது என்றும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார் விலை கிடைக்காது என்றும் தெரிவித்து ஓராண்டிற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், மேற்பாக சட்டங்களில் உள்ள பயன்களை விவசாயிகளின் ஒரு பிரிவினரிடம் புரிய வைக்க முடியவில்லை என்று தெரிவித்து மேற்படி சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகளின்பால் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதற்காக அதிமுக சார்பில் பிரதமருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி கே பழனிசாமி ட்வீட்

இது குறித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி, "வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றமைக்கும், குறைந்தபட்ச ஆதார விலை (MSP) நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும் எனது நன்றிகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்," என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க:வேளாண் சட்டங்கள் வாபஸ்: 'பிரதமருக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது'

Last Updated : Nov 19, 2021, 6:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details