தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம்: இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் - இபிஎஸ்

சென்னை அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேரை விசாரணைக்கு ஆஜராக ராயப்பேட்டை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலக கலவரச் சம்பவம்: இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன்
அதிமுக தலைமை அலுவலக கலவரச் சம்பவம்: இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன்அதிமுக தலைமை அலுவலக கலவரச் சம்பவம்: இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன்

By

Published : Jul 18, 2022, 12:08 PM IST

சென்னை:வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதே வேளையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன் கூடியிருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்டு கலவரமாக மாறியது.

அப்போது நடத்தப்பட்ட கல்வீச்சில் காவல்துறையினர் உட்பட 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது ராயப்பேட்டை காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கலவரத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஆதராங்களை வைத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கலவரச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேருக்கு ராயப்பேட்டை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

குறிப்பாக கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை வைத்து தஞ்சை, ஒரத்தநாடு மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக-வினருக்கு நேரில் சென்று காவல் துறையினர் சம்மனை வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 30பேரும், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:‘மாணவி மரணத்தை அரசியலாக்குகிறார் ஈபிஎஸ்’ - அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details