சென்னை:வானகரத்தில் நாளைய தினம் (ஜுன் 23) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொது குழுவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுக்குழு நடக்கக் கூடிய இடத்தில் முன்பாக 100 மீட்டர் தொலைவிலேயே இரும்பு தகடுகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. வழிநெடுகிலும் கட்டவுட் பேனர்கள் வைக்கும் பணி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.