தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வரும் ஜனவரி 9இல் அதிமுக பொதுக்குழு கூட்டம் - AIADMK general body meeting

வரும் ஜனவரி 9ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்
வரும் ஜனவரி 9ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்

By

Published : Dec 21, 2020, 2:42 PM IST

Updated : Dec 21, 2020, 3:29 PM IST

14:36 December 21

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 

வரும் ஜனவரி 9ஆம் தேதி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 8.50 மணிக்கு சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழோடும், முகக்கவசம் அணிந்தும் உரிய கரோனா கால பாதுகாப்பு வழிகாட்டுநெறிமுறைகளைப் பின்பற்றியும் பங்கேற்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இதையும் படிங்க: தனியார் மூலம் மின்வாரிய ஊழியர்களை நியமிக்கும் அரசாணை ரத்து!


 

Last Updated : Dec 21, 2020, 3:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details