சென்னை:ராயபுரம், திரு.வி.க நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறயுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்படும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆய்வு செய்தார்.
சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறும்
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைப்படி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் இடங்களில் அதிமுகவினர் எழுச்சியோடு விருப்ப மனு அளித்து வருகின்றனர்.
இந்த எழுச்சியைப் பார்க்கும்போது அதிமுகவும், தோழமை கட்சிகளும் வெற்றி பெறும். இந்தத் தேர்தலில் கிடைக்கும் வெற்றியை வைத்து சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறும்.
மக்கள் படகுகள் மூலம் சென்று வருகின்றனர்
தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாகச் செயல்படாமல் ஜனநாயக முறையில் செயல்பட்டால் நடைபெறும் தேர்தலில் அதிமுக வெற்றியைப் பெறும். சென்னையில் உள்ள 16 கால்வாய்களில் மாம்பழம் கால்வாய், ஓட்டேரி கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது.
இதனால், சென்னை மக்கள் வெள்ள நீரில் படகுகள் மூலம் சென்று வந்து அவதிப்பட்டு வருகின்றனர். மழைநீர் கால்வாய்கள் முழுவதுமாக தூர்வாரப்படாமல் இருப்பதாலும் சென்னையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.