தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அதிமுகவினர் டோக்கன் விநியோகித்து வாக்குச் சேகரிப்பு' - எம்எல்ஏ சேகர்பாபு புகார் - MLA Sekarbabu

சென்னை: துறைமுகம், ஆர்.கே. நகர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவினர் டோக்கன் விநியோகித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் என திமுக எம்எல்ஏ சேகர்பாபு மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

எம்எல்ஏ சேகர்பாபு, அதிமுகவினர் டோக்கன் விநியோகித்து வாக்குச் சேகரிக்கின்றனர் எம்எல்ஏ சேகர்பாபு புகார், சென்னை, Chennai, MLA Sekarbabu, Chennai Harbour MLA Sekar babu
aiadmk-distributes-tokens-and-collecting-votes-complained-by-mla-sekar-babu

By

Published : Mar 25, 2021, 8:08 PM IST

Updated : Mar 25, 2021, 9:48 PM IST

அதிமுக டோக்கன் விநியோகம் செய்து வாக்குச் சேகரித்துவருவதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷிடம் புகார் அளிக்க அம்மா மாளிகைக்கு துறைமுக திமுக எம்எல்ஏ சேகர்பாபு வருகைபுரிந்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

"துறைமுகம் தொகுதியில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திருமண மண்டபத்தை பாய், தலையணை, பெட்ஷீட்டோடு உண்டு - உறைவிடமாகப் பயன்படுத்திவருகின்றனர்.

சென்னை துறைமுகம் எம்எல்ஏ சேகர்பாபு பேட்டி

இது குறித்து உரிய ஆவணங்களோடு தேர்தல் அலுவலர்களுக்குப் புகார் அளித்துள்ளோம். இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்கள், ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போதும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மேலும், சென்னை மாவட்டத்திற்குள்பட்ட துறைமுகம், ஆர்.கே. நகர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவினர் டோக்கன் விநியோகித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அது குறித்தும் புகார் அளிக்க இங்கு வந்தேன்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அரசியல் ஆதாயத்திற்காக வருமானவரித் துறை சோதனை - துரைமுருகன்

Last Updated : Mar 25, 2021, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details