தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தயவு செய்து அமைதி காக்கவும் - தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அன்பான கோரிக்கை! - ஓபிஎஸ் ட்வீட்

'அதிமுக தொண்டர்கள் அனைவரும் தயவு செய்து அமைதி காக்கவும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தயவு செய்து அமைதி காக்கவும் - தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அன்பான கோரிக்கை!
தயவு செய்து அமைதி காக்கவும் - தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அன்பான கோரிக்கை!

By

Published : Jun 15, 2022, 8:29 PM IST

Updated : Jun 15, 2022, 8:47 PM IST

அதிமுகவின் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று(ஜூன் 14) அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் அதிமுக இயங்க வேண்டும் என சுவரொட்டிகள், சமூக வலைதளங்கள், பொது இடங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'அதிமுக தொண்டர்கள் அனைவரும் தயவு செய்து அமைதி காக்கவும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இரட்டை இலையா? இரண்டு இலையா? ஒற்றை தலைமையை நோக்கி நகரும் அதிமுக...!

Last Updated : Jun 15, 2022, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details