பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், மாவட்ட கழகச் செயலாளருமான சிட்லப்பாக்கம் ச. ராஜேந்திரன் இன்று (ஏப். 3) பம்மல், நாகல்கேணி, பம்மல் முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர் ஆகியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பல்லாவரம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவருக்கு மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டும், வழி எங்கும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்த்தூவி பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான திட்டங்களைப் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக் கூறியபோது,
'குறிப்பாக பல்லாவரம் தொகுதியில், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகியப் பகுதிகளுக்கு வெயில் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க செம்பரம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.
ஏழைகளின் முதலமைச்சராக செயல்படும் எடப்பாடியார், அதற்காக 191 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி தொடங்கியும் வைத்துள்ளார்.
தற்போது, இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு என்பதே இருக்காது. ஏழைகளின் அரசாக செயல்படும் அதிமுக ஆட்சி மீண்டும் மலர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வில்லன் நடிகர் தீனா பரப்புரை'