தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக இளைஞர்-இளம்பெண்கள் பாசறை: மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமை இட்ட உத்தரவு!

சென்னை: இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் பூத் வாரியாக உறுப்பினர்களைச் சேர்த்து விவரங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு அதிமுக தலைமைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக தலைமைக் கழகம்
அதிமுக தலைமைக் கழகம்

By

Published : Aug 18, 2020, 10:46 AM IST

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர்-இளம்பெண்கள் பாசறைக்கு பூத் வாரியாக உறுப்பினர்களைச் சேர்த்து, நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்டுள்ள பூத் வாரியாக கழக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் அதன் விவரங்களை விரைவில் தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சலசலப்புக்கு இடம் கொடுக்காமல் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் - கட்சியினருக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details