இதுகுறித்து அவர்கள் எழுதிய மடலில், " அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுகவின் கோடிக்கணக்கான அன்பு உடன்பிறப்புகளுக்கு நல்வாழ்த்துகளையும், வாஞ்சைமிகு வணக்கத்தையும் கூறி மகிழ்கிறோம்.
'வாருங்கள் உடன்பிறப்புகளே, நம் பணிகளை இன்றே தொடங்குவோம்' -ஓபிஎஸ், இபிஎஸ் மடல்! - Edappadi K. Palaniswami
10:30 October 16
சென்னை: அதிமுகவின் 49ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களுக்கு மடல் அனுப்பி உள்ளனர்.
நாம் உயிரினும் மேலாக மதித்து போற்றி, பாதுகாத்து வரும் நம் இயக்கத்திற்கு 48 ஆண்டுகால பணி நிறைவுற்று, 49ஆவது ஆண்டு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு பொன்விழா கொண்டாட இருப்பதால், இந்த ஆண்டு நாம் ஆற்றப்போகும் பணிகள் எல்லாம் கழகப் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்திட வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழவேண்டும். கல்வியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ் நாடு உயர் நிலையை அடைய வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ, சமதர்ம சமுதாயம், சமூக நீதிக் கொள்கைகளின் அடிப்படையில் இங்கே கட்டி எழுப்பப்பட வேண்டும்.
"தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா" என்ற பெருமிதம் நிலைபெற வேண்டும் என்பவையே இந்த இயக்கம் தனது இதயமாகக் கொண்ட லட்சியங்கள். அடுத்த ஆண்டு 2021, நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது. அதிமுக-வின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, கழகமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்றுச் சாதனையை படைப்போம். 'வாருங்கள் உடன்பிறப்புகளே, நம் பணிகளை இன்றே தொடங்குவோம்' என்று அன்போடு அழைக்கிறோம்" என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:யாருக்கு அடிமையாக அதிமுக ஆட்சி செயல்படுகிறது? - அதிமுக முன்னாள் எம்.பி. 'பளீச்'