சென்னை: வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று (மார்ச்.19) தமிழ்நாடு சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து வேளாண்துறை செயலர் சமய மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஊட்டச் சத்துகுறைபாடு அதிகளவில் காணப்படுவதால், பயறு மற்றும் சிறுதானிய உற்பத்தி, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்திக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுபயிர் உற்பத்தி செய்வதற்கும் திட்டமிடப்படுள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான மரக்கன்றுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், விவசாய பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். விவசாயிகள் தங்கள் மண்ணின் தன்மைக்கு ஏற்ப என்ன மாதிரியான பொருள்களை விற்பனை செய்யலாம் என கண்டறிய 'தமிழ் மண் வளம்' எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.