தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன? அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் ஆலோசனை - Agriculture

வேளாண் துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

MRK Panneer Selvam
MRK Panneer Selvam

By

Published : Nov 22, 2021, 3:42 PM IST

சென்னை : வேளாண் துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

மேலும் 2021-22ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரின் வேளாண் துறை மானியக் கோரிக்கையின் போது பல்வேறு அறிவிப்புகளை வேளாண்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டவை, தற்போது செயல்படுத்த தயார் நிலையில் உள்ளவை, செயல்படுத்தப்படாமல் உள்ளவை என திட்டங்களின் நிலை குறித்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், "வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, அரசு சிறப்பு செயலர் ஆபிரகாம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் உள்பட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : வேளாண் சட்டங்கள் போன்று நீட் தேர்வு திரும்ப பெறுமா? அண்ணாமலை பதில்

ABOUT THE AUTHOR

...view details