சென்னை: தமிழ்நாடு அரசின் 2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை பட்ஜெட் அறிக்கை இன்று (மார்ச் 19) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கால்நடை பராமரிப்பு திட்டங்களுக்காக மாநில அரசின் நிதியிலிருந்து ரூ.42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு பணிகளுக்கான திட்டங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், “உழைக்கும் எருதுகளும், பால் தரும் பசுக்களும், எரு சேர்க்கும் ஆடுகளும், பணம் தரும் செம்மறிகளும், வளம் தரும் கோழிகளும் உழவர்களுக்குக் காப்பீடாக இருக்கின்றன. மழை பொய்க்கும்போது கால்நடைகளே கைகொடுக்கின்றன. இயற்கை வேளாண்மை மக்களிடையே மீண்டும்வேர் பிடிக்கத் தொடங்கியிருக்கும் இச்சூழலில் கால்நடைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
உழவர்கள் பண்ணைக் குட்டைகளில் வளர்க்கவும், கொட்டில்களில் ஆடு வளர்க்கவும், கொட்டகைகளில் மாடு வளர்க்கவும், புழக்கடைகளில் கோழி வார்க்கவும் முற்பட்டால்தான் அவர்களது வருமானம் அதிகரிக்கும். அதற்கென்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பசுந்தீவனஇயக்கம்