சென்னை: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி தலைமையில் தெலங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடக, மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெய்வசிகாமணி, ”மஞ்சள் விவசாயம் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற விவசாயம். மஞ்சள் பொருளுக்கான ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துளோம். முதலமைச்சர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.