தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுவர்கள் போராட தடை விதிக்க சட்ட விதி உள்ளதா? - நீதிபதிகள் கேள்வி! - குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம்

சென்னை: போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

children
children

By

Published : Feb 27, 2020, 1:01 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.

அதில், சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தின் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர் பங்கேற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டங்களில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து மனுதாரர் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பள்ளிப் படிப்புக்குப் பின்னர் என்ன படிக்கலாம்? - மாணவர்களுக்கு வழிகாட்டிய மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details