துபாயிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று காலை 8.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர், ஆந்திராவைச் சேர்ந்த மூன்று பேர், புதுச்சேரியைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 14 பேருக்கு கடுமையான காய்ச்சல், சளித் தொல்லை இருந்தது. இதனையடுத்து அப்பயணிகளுக்கு கரோனா நோய் கண்டறியும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவா்களை வெளியே அனுப்பாமல், தனி அறையில் வைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கரோனா அறிகுறி: சிறப்பு மருத்துவ முகாம் கொண்டுசெல்லப்பட்ட பயணிகள்! - கரோனா வைரஸ்
சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த 14 பயணிகளுக்கு கரோனா வைரஸ் அறிகுறி சந்தேகத்தையடுத்து அவர்கள் அனைவரும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 24 மணி நேரத் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சோதனை செய்யப்பட்டதில் அவா்களுக்கு கரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, 2 சிறப்பு ஆம்புலன்ஸ்களில் அவா்கள் 14 பேரும், பூந்தமல்லியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனா். அங்கு அவர்கள் 24 மணி நேரம் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவா்கள் அனைவரும் டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பணியிலிருந்தவா்கள் என்றும், தற்போது கரோனா பீதியால் நாடு திரும்பியவா்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நெல்லையில் கொரோனா மையம்: அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவிப்பு