சென்னை: பௌர்ணமி தினமான நவம்பர் 19ஆம் தேதியான இன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது.
பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம், 1 நிமிடம் நீடிக்கும். மேலும், அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் உள்ளவர்களுக்கு, இன்றைய கிரகணம் முழுமையாகத் தெரியும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பகல் 1.30 மணிக்கு, கிரகணத்தின் உச்சம் ஏற்படும் என்பதால் கிரகணத்தை காண இயலாது. சந்திரனின் 97 விழுக்காடு பகுதி பூமி மறைப்பதால் நிலவு சிகப்பு நிறத்தில் காணப்படும்.
சுமார் 580 ஆண்டுகளில், இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:SPACEX: விண்வெளிக்கு சுற்றுலா சென்றிருக்கும் நால்வர்!