மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி ரூபாயை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி, நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தனக்கு வழங்க வேண்டிய தொகையை தரும் வரை ஞானவேல் ராஜாவின் புதிய படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்" எனக் கோரினார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், "நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்த, மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும், அந்தப் படத்தின் இயக்குநராக ராஜேஷ்தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால்தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும், அந்தப் படத்தால் தமக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் ரூபாய் தர வேண்டாம் எனவும், விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் தன்னை சிக்க வைத்து விட வேண்டாம் எனவும் சிவகார்த்திகேயன் கூறினார்.