சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து புறப்பட்ட தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவா் பெரிய பிளாஸ்டிக் கூடையுடன் வந்தார். அவா் மீது சந்தேகம் ஏற்படவே சுங்க அலுவலர்கள் அவரை நிறுத்தி கூடையை சோதனையிட்டனா்.
தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட அரியவகை குரங்கு குட்டிகள் சென்னையில் உயிரிழப்பு - Chennai airport
தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 அரியவகை ஆப்பிரிக்க குரங்கு குட்டிகள் உயிரிழந்தன.
அதில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 2 அரிய வகை குரங்கு குட்டிகள் மயங்கிய நிலையில் கிடந்தன. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரை கைது செய்தனர். குரங்கு குட்டிகளையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே 2 குரங்கு குட்டிகளும் உயிரிழந்துவிட்டன. இதனால் அலுவலர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் போதைப் பொருட்களை அழிப்பதற்கான பயன்படுத்தப்படும் தனியார் பாய்லர் தொழிற்சாலைக்கு உடல்களை கொண்டு சென்று, எரித்தனர்.
இதையும் படிங்க:ஓசூரில் நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்ட கூகுள் மேப்