தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கரோனாவால் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் பாதிப்பு' - மக்கள் நல்வாழ்வுத் துறை - Affecting 104 children under 12 by Corona

சென்னை: தமிழ்நாட்டில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

Department of People's Welfare
Department of People's Welfare

By

Published : Apr 25, 2020, 8:09 PM IST

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 95 பேர் நேற்று (ஏப்ரல் 23) வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பை 87 ஆயிரத்து 159 பேர் இன்று முடித்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 358 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.

தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 25 பயணிகள், விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர். மேலும், விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தனி வார்டில் 865 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

80 ஆயிரத்து 110 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்பட்டன. இவர்களில் 1,821 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 69 ஆயிரத்து 390 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆயிரத்து 754 பேரின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏழாயிரத்து 145 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மேலும் 66 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 960 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Corona

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று வரை 1755 பேருக்கும், இன்று 66 பேருக்கும் என 1,821 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று வரை 22 பேர் உயிரிழந்தனர். இன்று ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான 3,371 வென்டிலேட்டர், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.

835 நோயாளிகள் நல்ல நிலையில் உள்ளனர். இன்று 38 ஆண்களுக்கும் 28 பெண்களுக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 1240 ஆண்களும், 581 பெண்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 12 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இருபாலினத்தைச் சேர்ந்த 104 குழந்தைகளும் அடங்குவர். இன்றைய தினம் 7,131 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 72 ஆயிரத்து 975 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் சென்னை மாவட்டத்தில் 43 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 4 பேருக்கும், பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் தலா இருவருக்கும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 66 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது". இவ்வாறு அந்த செய்திக் குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியுள்ள 37 மாவட்டங்களின் நிலவரம்:

Corona

ABOUT THE AUTHOR

...view details