சென்னைதமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கியதற்காகவும், வழக்கறிஞர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.20 கோடி அளித்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பி.எப் தொகை உயர்வு, முதலமைச்சருக்கு வழக்குரைஞர்கள் நன்றி - பிஎப் தொகையை உயர்தியதற்காக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த வழக்கறிஞர் சங்கம்
வழக்கறிஞர்களுக்கான பிஎப் எனப்படும் சேம நலநிதியை உயர்த்தியது உள்ளிட்டவைகளுக்காக வழக்கறிஞர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துகொண்டனர்.
மேலும் சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை நிறுவவும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதே போல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லியிஸா ரமேஷ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளும் முதலமைச்சர் சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டனர்.
இதையும் படிங்க:சென்னையின் மிக நீளமான பாலம்-திறந்து வைத்தார் முதல்வர்