தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டம்! - admk news

அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை (ஜனவரி 9) மாலை 5 மணிக்கு மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

admk party meeting, அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டம், admk news, அதிமுக செய்திகள்
admk party meeting

By

Published : Jan 8, 2021, 1:58 PM IST

சென்னை: ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனையில் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டத்தில் அதிமுக செய்த சாதனைகளை பொது மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக பரப்புரை அமைய வேண்டும் என்றும், சசிகலா விடுதலை தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தேர்தல் பணிகளை தொய்வின்றி திறம்பட செய்ய வேண்டும் என்றும் அறிவுத்தபடுவார்கள் என்று கருதப்படுகிறது. மூன்றாம் முறையாக ஆட்சியை கைப்பற்ற தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அதிமுகவின் பல திட்டங்களை கொண்டு செல்ல திட்டமிடப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஒரு சில மாவட்டங்களில், கருத்து வேறுபாடுகளுடன் இருக்கும் நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details