தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பல தலைமைகள் ஆதிக்கம் செலுத்தினால் கட்சி சிறப்பாக இருக்காது' - chennai airport

சென்னை: 'பொதுவாக அரசியல் கட்சிகள் ஒற்றைத் தலைமையின் கீழ் இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும். பல தலைமைகள் ஆதிக்கம் செலுத்தினால் அக்கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்காது' என அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர்

By

Published : Jun 11, 2019, 9:03 AM IST

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாவது,

"நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என தமிழிசை நம்பிக்கையாகக் கூறினார். ஆனால் அக்கட்சி படுதோல்வி அடைந்தது. அதேபோல தமிழ்நாட்டில் அடுத்து வரும் சட்டபேரவைத் தேர்தலிலும் பாஜக நிச்சயம் தோல்வி அடையும். அந்த சட்டபேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராவார்" என்றார்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், பொதுவாக அரசியல் கட்சிகள் ஒற்றைத் தலைமையின் கீழ் இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும். பல தலைமைகள் ஆதிக்கம் செலுத்தினால் அக்கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்காது எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details