தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜூன் 14-இல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் - edappadi palaniswami

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

நிபந்தனைகளோடு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
நிபந்தனைகளோடு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

By

Published : Jun 10, 2021, 12:20 PM IST

சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிகைகயில் கூறப்பட்டுள்ளதாவது, "அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 14ஆம் தேதி நடைபெறுகிறது.

எம்எல்ஏக்கள் அனைவரும் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைககளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக முகக் கவசம் அணிதல் வேண்டும். அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்துவர வேண்டும். எம்எல்ஏக்கள் தவிர வேறு யாரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரக்கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக அறிக்கை

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கட்சியின் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களிடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இதனிடையே அமமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details