தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்று கூடுகிறது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: சசிகலாவின் அரசியல் தலையீடுகளுக்கு முடிவு?

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. மீண்டும் அரசியலுக்கு வருவேன் என சசிகலா பேசி வருவதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

By

Published : Jun 14, 2021, 7:17 AM IST

Updated : Jun 14, 2021, 7:44 AM IST

இன்று கூடுகிறது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
இன்று கூடுகிறது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. முன்னதாக அக்கட்சி தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில், "சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக, முகக் கவசம் அணிதல் வேண்டும். அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்துவர வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரக்கூடாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓபிஎஸ், இபிஎஸ்

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கட்சியின் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களிடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், சசிகலா தரப்பில் தொடர்ந்து ஆடியோ வெளியாகி வருவது அதிமுக மூத்த தலைவர்களை பதற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறது. இன்றைய கூட்டத்தில் இது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் அரசியலுக்கு வருவேன் என சசிகலா பேசி வருவதால் இன்று நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிங்க: ஆழம் பார்க்கும் சசிகலா - பதற்றத்தில் அதிமுக தலைவர்கள்!

Last Updated : Jun 14, 2021, 7:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details