சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம் போட்டியிடுகிறார். இவர் இன்று (மார்ச் 17) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஏராளமான தொண்டர்களுடன் பேரணியாக வந்து சென்னை அயனாவரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆதி ராஜாராம், "கொளத்தூர் தொகுதியில் மிக பிரகாசமான வெற்றியைப் பெறுவேன். பல இடங்களில் கழிவுநீர் வெளியேறியுள்ளது. அதை சரி செய்வேன். கோயில், குளங்கள் திமுகவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஸ்டாலின் 10 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையும் சரி செய்வேன்.