சென்னை:அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம தொடங்கியதிலிருந்து, விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , ஈபிஎஸ் தரப்பில் பிரம்மாண்டமாக பொதுக்குழுவிற்கான ஏற்பாடு என மோதல் நீடித்து வந்தது.
பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்த நீதிமன்ற உத்தரவையடுத்து இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு, கல்வீச்சு என மோதல் ஏற்பட்டது.
அதனையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக அலுவலக கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வாழ்க ஓபிஎஸ் என கோஷமிட்டனர்