அதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு நாளை துவங்குவதை ஒட்டி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்பவும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளின்படியும் ஏழை, எளியோர், உழைக்கும் மக்கள், தாய்மார்கள் நலன் காத்திட எண்ணற்ற திட்டங்களை அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு கண்டு வருகிறது. அதன் விளைவாக,
- மகளிர் பாதுகாப்பிற்கு ’காவலன் செயலி’ அறிமுகப்படுத்தியது.
- கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைத் தொழிலாளர்கள் சுமார் 80 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் ரொக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் சமைத்த, சத்தான உணவு, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணத் தொகை, இரண்டு முறை கூடுதலாக அரிசி, மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
- பல்வேறு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா 2,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டதோடு, உறுப்பினர் அல்லாத தொழிலாளர்களுக்கும் தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 3,00,431 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
- முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மூலம்
- 8,835 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு.
- 2.05 கோடி குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுப் பொருட்களுடன் 1,000 ரூபாய் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டிருக்கிறது.
- மத்திய அரசின் நல் ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம்.
- வேளாண்மை உற்பத்தியில் அதிமுக அரசு, மத்திய அரசு வேளாண் துறையின் `கிருஷி கர்மான்’ விருதினை தொடர்ந்து 5 முறை பெற்றுள்ளது.
- பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, காவேரி டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காப்பாற்றப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் புதிதாக 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
- நிர்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் நீர் நிலைகளைப் பாதுகாக்கும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.