சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீரப்பளித்தது, இதனை எதிர்த்து ஓபிஎஸ் நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளார்.
அதன்படி ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயரநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வரும் 5ஆம் தேதி (திங்கட்கிழமை) மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகாமல் பொதுக்குழுவை கூட்டியது எப்படி செல்லும் என்று நீதிமன்றத்தில் முறையிடவும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சென்னை உயர்ந்தீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்று ஓ.பன்னீர்செல்வம், "சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:உற்சாகத்தில் ஈபிஎஸ்..! மீண்டும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டும் ஓபிஎஸ்..! அதிமுகவில் நடக்கப்போவது என்ன?