கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு, தொழில் நிறுவனங்கள், அவரது சகோதரர் வீடு, நிறுவனங்கள் என சுமார் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி பவானீஸ்வரி தலைமையில் 26 குழுக்களாக ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு டிஎஸ்பி தலைமையிலான 10 அலுவலர்கள் என 260 லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இன்று (ஜூலை.22) காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த திடீர் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.
அமைச்சர் வீட்டின் முன் கூடிய அதிமுக தொண்டர்கள் கடந்த ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது அதிகளவில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதனைத்தொடந்து லஞ்ச ஒழிப்புத்துறை கரூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவரது சகோதரர்களின் வீடு, நிறுவனங்கள் என 26 இடங்களில் சோதனை செய்தது.
அமைச்சரின் சகோதரர் வீடு, நிறுவனங்களில் சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களுக்கு முன்பு குவிக்கப்பட்ட காவல் துறையினர்... எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சாந்திசேகருக்கு சொந்தமான ரெயின்போ நகர் சாயப்பட்டறையில் மட்டும் இரண்டு டிஎஸ்பி, இரண்டு காவல் ஆய்வாளர்கள் என 22 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு 8 மணிநேர நிலவரப்படி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.25,56,000 ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாக அதிகாரப்பூர்வமாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை