தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 6, 2021, 3:51 PM IST

Updated : Mar 6, 2021, 5:19 PM IST

ETV Bharat / city

இன்று மாலை மீண்டும் அதிமுக- தேமுதிக  பேச்சுவார்த்தை

சென்னை: அதிமுக- தேமுதிக இடையேயான சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை மீண்டும் நடைபெறுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்

சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல், தேர்தல் அறிக்கை, தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடிப்பதாகவும், இன்று (மார்ச் 6) மாலை பேசி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்

அதிமுக கூட்டணியின்தொகுதிப் பங்கீட்டில் தேமுதிக, 20 சட்டப்பேரவை இடங்களையும், ஒரு மக்களவை இடத்தையும் கேட்பதாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுக தரப்பு மறுப்பு தெரிவித்து, தேமுதிகவிற்கு 15 தொகுதிகளை மட்டுமே வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பேரவைத் தேர்தல் 2021: அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலவரங்கள் உடனுக்குடன்

Last Updated : Mar 6, 2021, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details