தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாடாளுமன்றத் தேர்தல்; அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - நாடாளுமன்றத் தேர்தல்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க மார்ச் 17-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

meeting

By

Published : Mar 15, 2019, 11:43 AM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்கள் தலைமையிலான கூட்டணியை இறுதி செய்திருக்கின்றன. இரு கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதம் இருக்கும் 20 தொகுதிகளில் களமிறங்க இருக்கின்றன.

ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவும், கருணாநிதி இல்லாமல் திமுகவும் சந்திக்க இருக்கும் முதல் தேர்தல் என்பதால் இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்பதில் இரு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. அதற்கான பணிகளிலும் இரு கட்சிகளும் இறங்கியுள்ளன.

elec

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க மார்ச் 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இக்கூட்டத்துக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அன்றைய தினமே அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details