தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மிரட்டும் அதிமுக வேட்பாளரின் மகன் - அமமுக வேட்பாளர் புகார் - அதிமுக சார்பில் போட்டியிடும் மூர்த்தியின் மகன் கண்ணதாசன்

உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மிரட்டும் அதிமுக வேட்பாளரின் மகன்
மிரட்டும் அதிமுக வேட்பாளரின் மகன்

By

Published : Mar 30, 2021, 5:42 PM IST

சென்னை: மாதவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மூர்த்தியின் அடியாட்களை போல் காவல்துறையினர் செயல்பட்டு, அமமுக நிர்வாகிகளை கைது செய்து வருவதாக மாதவரம் தொகுதியில் அமமுக வேட்பாளர் தக்ஷிணாமூர்த்தி புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் மாதவரம் சட்டப்பேரவை தொகுதியின் அமமுக வேட்பாளர் தக்ஷிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது தக்ஷிணாமூர்த்தி, மாதவரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மூர்த்தியின் மகன் கண்ணதாசன், அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றும் நிர்வாகிகளை தொலைபேசி மூலமாகவும், வீடுகளுக்கு சென்று நேரடியாகவும் மிரட்டி வருகிறார். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை வழக்கு கூட பதியப்படவில்லை.

உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்க தாமதமானால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details