தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் விரைவில் காலியாகவுள்ள ஆறு ராஜ்ய சபா இடங்களுக்கு மார்ச் 26ஆம் தேதி மாநிலங்களைவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் கேபி முனுசாமி, தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று மார்ச் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.