அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதனையடுத்து திமுக தனது வேட்பாளர்களை முதலில் அறிவித்தது. அதேபோல், தினகரனின் அமமுகவும் இன்று தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
நான்கு தொகுதி இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? - ஓபிஎஸ்
சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
admk
இதற்கிடையே நான்கு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். எனவே அக்கட்சி எப்போது தனது வேட்பாளர்களை அறிவிக்கும் என்ற கேள்வி பலரிடம் எழுந்திருந்தது.
இந்நிலையில், நான்கு தொகுதிகளில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக தலைமை இன்று அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.