தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமைச்சர்கள் என்றாலும் கட்டுப்பாட்டை மீறக்கூடாது - அமைச்சர் ஜெயக்குமார் - சிவாஜி கணேசன்

சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை அமைச்சர்களே ஆனாலும் மீறக்கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

jayakumar
jayakumar

By

Published : Oct 1, 2020, 12:29 PM IST

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் அவருடைய உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சிவாஜி கணேசனின் குடும்பத்தினரான நடிகர்கள் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ” மகாகவி பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்டோரை நாம் நேரில் பார்த்தது இல்லை. அவர்களை நினைக்கும்போது சிவாஜிதான் நமக்கு ஞாபகம் வருவார். அவரைப் போன்று வசனம் பேசி நடிப்பதற்கு இனி யாரும் இல்லை.

அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அவரவர் வீடுகளில் ஆலோசனையில் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான். அதிமுகவில் பிரச்னை எப்போது வரும் என எதிர்பார்க்கும் எதிரிகளுக்கு, அமைச்சர்களோ, தொண்டர்களோ இடம் அளித்துவிடக்கூடாது ” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’எடப்பாடிதான் மீண்டும் முதலமைச்சர்’ - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details